#திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு' என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின்…
— Selvaraj Venkatesan (@niftytelevision) January 2, 2025
`நீறில்லா நெற்றி பாழ்' என்பது ஓளவை வாக்கு. திருநீற்றின் பெருமை சொல்லவே உருவானது திருஞானசம்பந்தரின் `திருநீற்றுப் பதிகம்'. மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு. சைவ சமயத்தவரின் அடையாளமாக மட்டுமல்லாமல், தெய்விக ஆற்றல் தரும் புனிதச் சின்னமாகவே திருநீறு போற்றப்படுகிறது. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதால், எதிலும் அளவுக்கு அதிகமான ஆசை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதுதான் திருநீறு. `நீறு' என்றால் சாம்பல்; `திருநீறு' என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள். திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம்.
மனித உடலில் நெற்றி ஒரு முக்கியமான ஸ்தானம். புருவ மத்தியை வசியப்படுத்தி பல வகை சித்துகளை செய்ய முடியும் என்பது ஞானியர் வாக்கு. நெற்றியின் மையத்தைக் காப்பதற்கே விபூதி அணியப்படுகிறது. ஆக்ஞா, விசுத்தி சக்கரங்களை பாதுகாத்து ஆன்ம ஒளியைப் பெருக்குவது விபூதி. பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டச் செய்யும் நெற்றியைச் சீர்படுத்தவும், சூரியக் கதிர்களின் சக்திகளை நெற்றி வழியாக உள்ளே செலுத்தவும் திருநீறு பயன்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. விபூதி சிறந்த கிருமி நாசினி என்றும், அதனால் பல நோய்களை வராமல் தடுக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. விபூதியை, ஜபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம்... எனப் பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்திய விதத்தை அகத்திய மாமுனி `அகத்தியர் பரிபூரணம்' என்ற நூலில் விளக்கியிருக்கிறார். இதைப் படிப்பவர்கள் விபூதியைத் தவிர்க்கவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.
விபூதியைத் தரித்துக்கொள்ளும் முறைகளும் பெயர்களும்...
அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக்கொள்ளும் முறை `உள் தூளனம்.’
ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரலால் இடைவெளி விட்டு மூன்று கோடுகளாக விபூதியைத் தரித்துக்கொள்ளும் முறை திரிபுண்டரீகம். திருநீற்றை மோதிரவிரலால் எடுப்பதுதான் சிறந்தது. நம் உடலில் பவித்ரமான பாகம் என்று அதுதான் கூறப்படுகிறது. வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றால் எடுத்து அண்ணாந்து, நெற்றியில் பூச வேண்டும். `திருச்சிற்றம்பலம்', `சிவாயநம:' அல்லது 'சிவ சிவ' என்று சொல்லி அணிந்துகொள்ள வேண்டும். காலை, மாலை, மற்றும் இரவு படுக்கப் போகும்போதும், வெளியே கிளம்பும்போதும் திருநீறு தரிக்க வேண்டும். நடந்துகொண்டும், படுத்துக்கொண்டும் விபூதி தரிக்கவே கூடாது.
`திருநீற்றைக் கொடுப்பவர் செய்த தவப் பயன் மற்றும் பூஜா பலன்கள் அதை வாங்குவோருக்கும் போய்ச் சேர்ந்துவிடும். எனவே, தியானத்தில் சிறந்த உயர் நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே விபூதியைப் பெற வேண்டும்’ என்கிறார் அகத்தியர். `ரூம் றீம் சிம்ரா' என்று சொல்லி பெரியவர்களிடம் திருநீறு வாங்கினால் அவர்களின் பரிபூரண ஆசியைப் பெறலாம் என்றும் கூறுகிறார்.
திருநீறு ஆன்மிக பலத்துக்கு மட்டுமல்ல, ஆரோக்கிய நலத்துக்கும் உகந்தது என்கிறது நவீன அறிவியல். `மகிமை என்ற பொருளைக்கொண்ட விபூதியின் ஆற்றல், சிவனுக்கு நிகரானது’ என்கிறது திருஞான சம்பந்தரின் தேவாரம். தேவர்களும் ஞானிகளும் போற்றிய திருநீற்றை அணிந்து நாளும் வளமோடு வாழ்வோம்!
#திருநீற்றுபதிகம் pic.twitter.com/LTl56nQngs
— Selvaraj Venkatesan (@niftytelevision) December 21, 2023
திருநீற்றுபதிகம் என்பது திருஞானசம்பந்தர் எழுதிய தேவாரப் பாடல்களில் ஒரு பகுதியாகும். இந்த பதிகம் சிவபெருமானுக்கு உகந்த ஒரு புகழ்பாடலாகும், மேலும் இது திருநீறு (விபூதி) எனப்படும் சாம்பலை புனிதப்படுத்தும் பாடல்களை கொண்டது. இந்த பதிகத்தில் உள்ள பாடல்கள் சிவபெருமானின் அருளையும், திருநீற்றின் ஆன்மீக பொருளையும் பாடுகின்றன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.