Saturday, January 11, 2025

பிராண முத்திரை

பிராண முத்திரை:

#pranamudra

செய்முறை:

தரையில் ஒரு விரிப்பு விரித்து பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.

முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.

கண்களை மூடி, ஒரு நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக வெளியே விடவும்.

பின் ஒரு நிமிடம் உங்கள் மூச்சோட்டதை மட்டும் கவனிக்கவும்.

பின் மோதிர விரல் சுண்டு விரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு அழுத்தம் கொடுக்கவும்.

மற்ற இரண்டு விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும்.

இந்த பிராண முத்திரையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். எனினும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்தல் நல்ல பலன் தரும்.

பலன்கள்:

நம் உடலில் பிராண சக்தியை சிறப்பாக சேமிக்க முடியும்.

கண் நரம்புகள் நன்கு இயங்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

மூச்சு திணறல் நீங்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்.

ஆஸ்துமா குணமடையும். 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

மரங்கள் பாடும் காற்றின் ராகம்

மரங்கள் பாடும் காற்றின் ராகம், இதயம் தொடும் இனிய சங்கீதம். இலைகள் நடனமிடும் மெல்லிசையில், பறவைகள் கூட பாடும் கானத்தில். காலைப் பனியில் இலைக...