இந்த நேரம் எங்கோ மழை பொழிகின்றது
இதே நேரம் எங்கோ வெயில் சுடுகின்றது
செடியில் எங்கோ மலர் துளிர்க்கின்றது
புயலில் எங்கோ மரம் விழுகின்றது
உலகம் இரண்டையும் பார்க்கின்றது
மனிதன் மனமே மயங்குகின்றது
வாழ்வில் எல்லாம் நேரும்
நல்லதும் கெட்டதும் மாறும்
புரிந்தால் தெளிந்தால் போதும்
அமைதி வந்தே சேரும்
புரிந்தால் தெளிந்தால் போதும்
அமைதி வந்தே சேரும்
இந்த நேரம் எங்கோ மழலை அழுகின்றது
இதே நேரம் சாலை மரணம் சிரிக்கின்றது
காதலில் எங்கோ முகம் சிவக்கின்றது
கண்ணீர் எங்கோ விழி வழிகின்றது
உலகம் இரண்டையும் பார்க்கின்றது
மனிதன் மனமே மயங்குகின்றது
வாழ்வில் எல்லாம் நேரும்
நல்லதும் கெட்டதும் மாறும்
புரிந்தால் தெளிந்தால் போதும்
அமைதி வந்தே சேரும்
இந்த நேரம் எங்கோ கிரீடம் தலையேறியது
இதே நேரம் எங்கோ மானம் பறிபோனது
எரிமலை எங்கோ கனல் எறிகின்றது
பனிமலை எங்கோ குளிர் தருகின்றது
உலகம் இரண்டையும் பார்க்கின்றது
மனிதன் மனமே மயங்குகின்றது
வாழ்வில் எல்லாம் நேரும்
நல்லதும் கெட்டதும் மாறும்
புரிந்தால் தெளிந்தால் போதும்
அமைதி வந்தே சேரும் .