#திருவாசகம் - திருப்பொன்னூசல் - tiruvāsagam - tiruppoṉṉūsal pic.twitter.com/vgQSiIJduM
— Selvaraj Venkatesan (@niftytelevision) August 12, 2024
ஏர்-ஆரும் பொற்பலகை ஏறி இனிது-அமர்ந்து
நாரா யணன்-அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்து-அருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்-தாள் இணை-பாடி
போர்-ஆர்-வேற் கண்-மடவீர் பொன்னூசல் ஆடாமோ.
வான் தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன் தங்கித் தித்தித்து அமுது-ஊறித் தான்-தெளிந்து-அங்கு
ஊன் தங்கி நின்று-உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடிக் குல-மஞ்ஞை
போன்று-அங்கு அன-நடையீர் பொன்னூசல் ஆடாமோ.
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்-நிற்பத்
தன்-நீறு எனக்கு-அருளித் தன்-கருணை வெள்ளத்து
மன்-ஊற மன்னு-மணி உத்தர கோசமங்கை
மின்-ஏறு மாட வியன்-மாளிகை பாடிப்
பொன்-ஏறு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
மஞ்சு-தோய் மாட-மணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று-அமுதம் ஊறிக் கருணை-செய்து
துஞ்சல் பிறப்பு-அறுப்பான் தூய புகழ்-பாடிப்
புஞ்சம்-ஆர் வெள்-வளையீர் பொன்னூசல் ஆடாமோ.
காணாக் கடவுள் கருணையினால் தேவர்-குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டு-அருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோண்-ஆர் பிறைச்-சென்னிக் கூத்தன் குணம்-பரவிப்
பூண்-ஆர் வன-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
தாது-ஆடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்-பிறவித்
தீது-ஓடா வண்ணம் திகழப் பிறப்பு-அறுப்பான்
காது-ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்
போது-ஆடு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்-புகழே
பன்னிப் பணிந்து-இறைஞ்சப் பாவங்கள் பற்று-அறுப்பான்
அன்னத்தின் மேல்-ஏறி ஆடும்-அணி மயில்-போல்
என்-அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்-பாடிப்
பொன்-ஒத்த பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
சால அமுது-உண்டு தாழ்-கடலின் மீது-எழுந்து
ஞாலம் மிகப்-பரிமேற் கொண்டு நமை-ஆண்டான்
சீலம் திகழும் திரு-உத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்-பாடிப்
பூலித்து அகங்-குழைந்து பொன்னூசல் ஆடாமோ.
தங்கு-உலவு சோதித் தனி-உருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு-அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்கு-உலவு கோதையும் தானும் பணி-கொண்ட
கொங்கு-உலவு கொன்றைச் சடையான் குணம்-பரவிப்
#திருவாசகம் - திருப்பொன்னூசல் pic.twitter.com/0JGQUCOFd2
— Selvaraj Venkatesan (@niftytelevision) August 20, 2024
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.