Sunday, May 7, 2023

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல் மந்திரம்

நன்மையும் தீமையும் கலந்தது தான் வாழ்க்கை. இன்றைய காலகட்டத்தில் நண்பனும் எதிரியும் நம் அருகிலேயே தான் இருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் ஒருவன் தன்னுடைய எதிரி யார் என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இப்படி கூறுவதால் எதிரியை அழிக்க தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை நமக்கு நன்மை செய்பவர்கள் யார்,தீமை செய்பவர்கள் யார் என்ற புரிதல் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காக தான் நம் எதிரியை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறுவதற்கான பொருள். சரி நாம் அவர்களை பற்றி கருத்தில் கொள்ளாமல் நம் பணிகளை செவ்வனே செய்து கொண்டு செல்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் நமக்கு எதிரியானவர்கள் நம்மை அப்படி பாவிக்கிறார்களா நிச்சயமாக மாட்டார்கள் அவர்கள் நமக்கு கெடுதல் செய்வதால் தானே நமக்கு எதிரிகளாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் சரிக்கு சமமாக நாமும் எதுவும் செய்யாமல் இந்த ஒரு மந்திரத்தை கூறி இந்த தெய்வத்தை சரணடைந்தாலே போதும். அந்த தெய்வம் வேறு யாரும் இல்லை அது கந்த கடவுள் தான். அந்த மந்திரம் பகை கடிதல்.

மற்ற தெய்வங்கள் எல்லாம் இருக்கும் போது இவரை மட்டும் எதற்கு நாம் சரணடைய வேண்டும். இவர் மட்டும் தான் எதிரிகளை நம்மை நெருங்க விடாமல் காப்பாற்றுவரா, மற்ற தெய்வங்கள் காக்க மாட்டார்களா என்றால் அனைத்து தெய்வங்களும் காக்க தான் செய்வார்கள் இதில் சந்தேகம் இல்லை. ஆனால் சில தெய்வங்கள் சில விஷயங்களுக்கு முதற் கடவுளாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த கந்த பெருமான் எதிரிகளை இல்லாமலே செய்து விடும் சூரசம்ஹார மூர்த்தியாக விளங்குபவர். அதனால் தான் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட இவரை அணுக வேண்டும் என்று கூறுவதற்கான காரணம்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

சத்ரு சம்ஹார திரிசதி

சத்ரு சம்ஹார திரிசதி Sathru Samhaara Thrisathi  ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் எ...