நடக்க நல்ல பாதை வேண்டுமானால் பாதை ஒருவன் போட்டு வைத்திருக்க வேண்டும் நல்ல உணவு வேண்டுமானால் உணவை ஒருவன் சமைத்து வைத்திருக்க வேண்டும் நீ போகும் பாதை நல்லதாக நித்திய கர்மங்கள் செய்ய வேண்டும் பயனாளி மட்டும் இருந்தால் பயன்தருவது யாரோ? யாரோ! இதை உணர்ந்தால் மானிடம் புனிதமாகும் உழைத்து உதவி உயர்ந்து நிற்கும் சேவை செய்யும் சிந்தை வேண்டும் சுயநலம் போகட்டும்... போகட்டும்! உலகம் முழுதும் ஒரு குடும்பம் ஒவ்வொருவரும் உழைத்து உயர்வோம் பிறருக்கு உதவி புனித தொண்டு பயன் எதிர்பார்க்காமல் செய்வோம் கர்ம யோகா காட்டும் வழி கடமை செய்து களிப்போம் நாம் எல்லோரும் ஒன்று என உணர்ந்தால் எல்லாம் நல்லதே நடக்கும்! பயனாளியாய் பறந்து திரிந்தால் பயன் எங்கிருந்து வரும் சொல்லடா? பயன்தருபவன் ஆகி நின்றால் பாரில் உயர்வு பெரும் நீயடா! உழைப்பே உயிர் உதவியே உண்மை அதை உணர்ந்து செயல்படு மகனே மானிட வாழ்வு புனிதமாகும் மகிழ்ச்சி நிரம்பும் மனதினிலே!


